Monday, April 27, 2015

Dinamalar.com |ஏப்ரல் 06,2015



-------- Original Message --------
From:"Dinamalar.com |ஏப்ரல் 27,2015" <noreply+feedproxy@google.com>
Sent:Mon, 27 Apr 2015 02:02:19 +0530
To:ishoponu@gmail.com
Subject:Dinamalar.com |ஏப்ரல் 06,2015

Dinamalar.com |ஏப்ரல் 06,2015


நேபாளத்தை சிதைத்த நிலநடுக்கத்தில் உயிரை விட்டவர்கள்2,500 போ: சொந்தங்களை பறிகொடுத்தவர்கள் சோகத்தில் தவிப்பு

Posted:

காத்மாண்டு : நேபாளத்தை உருக்குலைத்த நிலநடுக்கத்தில், பலியானோரின் எண்ணிக்கை, 2,500 ஆக அதிகரித்துள்ளது. இந்தியா உட்பட, சர்வதேச நாடுகளின் உதவியுடன், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையே, கடந்த, 80 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இதை தேசிய பேரழிவாக, நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தில் நேற்று முன்தினம், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 7.9 என, பதிவானது. இந்த நிலநடுக்கத்தில், தலைநகர் காத்மாண்டு உட்பட, நேபாளத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்த கட்டடங்கள், வீடுகள், புராதன சின்னங்கள் ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

நேபாள மக்களின் கண்ணீரை துடைப்போம் என மோடி உறுதி: வட மாநிலங்கள் நிலநடுக்கத்தால் நேற்றும் அதிர்ந்தன

Posted:

புதுடில்லி: ''நிலநடுக்கத்தால் நிலைகுலைந்து போயுள்ள மக்களின் கண்ணீரை துடைப்போம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே, நிலநடுக்கத்தால் வட மாநிலங்கள் நேற்றும் அதிர்ந்தன.'மன் கீ பாத்' என்ற பெயரில், வானொலி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றியபோது, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து, பிரதமர் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:நேற்று, நேபாளம் மட்டுமின்றி, நம் நாட்டின் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டு, பலர் உயிரிழந்து உள்ளனர். அந்த சோகத்தால் கனத்த மனதுடன், இன்று பேசுகிறேன்.நேபாளத்தில் ஏற்பட்ட சேதம் மிக அதிகம். குஜராத்தின் ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

மனித கழிவுகளை மனிதரே அள்ளுவதா: பிரதமர் மோடி உருக்கமான பேச்சு

Posted:

புதுடில்லி: ''சட்ட மேதை அம்பேத்கரின், 125வது பிறந்த நாளை கொண்டாடும் இந்த வேளையிலும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமை நடப்பதா... அதை நாம் அனுமதிப்பதா?'' என, பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.வானொலி மூலம்: 'மன் கீ பாத்' என்ற பெயரில், மாதம் ஒருமுறை, வானொலி மூலம் பொதுமக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி, நேற்று பேசியதாவது: இன்னமும் இந்த நாட்டில், சில இடங்களில், மனித கழிவுகளை மனிதரே அள்ளும் கொடுமை நடந்து வருவதை அறிந்து, மனம் வேதனைப்படுகிறது. ஏழை என்பதற்காக, ஒரு நபரை இந்த கொடுமைக்கு ஆளாக்கலாமா... அதை நாம் அனுமதிக்கலாமா?அதுவும், சட்ட மேதை ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

பதுக்கிய கறுப்பு பணம் ரூ.7,848 கோடி கண்டுபிடிப்பு

Posted:

புதுடில்லி: கடந்த, 2013 - 14ம் நிதியாண்டில், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும், 7,848 கோடி ரூபாய் அளவிற்கு, கறுப்பு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை, நிதி புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.இப்பிரிவின் உதவியால், கணக்கில் வராத, 7,078 கோடி ரூபாய் வருவாய் குறித்து, வருமான வரித் துறையும், 750 கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு தொடர்பாக சுங்கம் மற்றும் சேவை வரித் துறைகளும் நடவடிக்கை எடுத்துஉள்ளன. அமலாக்கத் துறை, 20 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பை கண்டுபிடித்து, அதில், 17 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது.வருமான வரித் துறையும், சேவை வரித் துறையும் முறையே, 163 கோடி ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

பவானி சிங் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

Posted:

புதுடில்லி: தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகலாமா என்பது குறித்து, சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கடந்த ஆண்டு செப்டம்பரில், நான்காண்டு சிறை தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அவர் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, பெங்களூரு ஐகோர்ட்டில் நடந்தது. அதில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் இன்று பிரதமரை சந்திக்கிறார் விஜயகாந்த்: ஒரே நாளில் கருணாநிதி உட்பட பலரை பார்த்ததால் பரபரப்பு

Posted:

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று இறங்கினார். இதற்காக, தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், த.மா.கா., தலைவர் வாசன், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோரை நேற்று ஒரே நாளில் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரின் கோபாலபுரம் இல்லத்தில், நேற்று காலை, 11:00 மணிக்கு ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

Posted:

கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன. தமிழகத்தில், 9,600 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன; 5,000 தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இவற்றில், 4,000 தனியார் மெட்ரிக் பள்ளி கள், 40 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் செயல்படுகின்றன. அனுமதி இல்லாமல்...: தனியார் தொடக்கப் பள்ளிகள் பட்டியல், அரசிடம் தெளிவாக இல்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகள் அனுமதியின்றி நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைத் தவிர, தனியார் ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

ரூ.25 கோடி கப்பம் கட்டியும் பலனில்லை: தண்ணீர் திறக்காமல் ஆந்திரா அலட்சியம்

Posted:

கிருஷ்ணா நீரைத் திறக்க, ஒப்பந்தப்படி தமிழக அரசு, 25 கோடி ரூபாய் வழங்கியும் பலனில்லை. நக்சல் பிரச்னை, வெளிமாநிலங்களை காரணம் காட்டி, தண்ணீர் திறப்பை ஆந்திரா நிறுத்தியுள்ளது. பராமரிப்பு கட்டணம்: ஆண்டுதோறும், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, தமிழகத்திற்கு ஆந்திரா வழங்க வேண்டும். ஜூலை முதல் டிசம்பர் வரை, முதல் தவணை யில், 8 டி.எம்.சி.,யும், ஜனவரி முதல் ஜூன் வரை, இரண்டாவது தவணையில், 4 டி.எம்.சி.,யும் தர வேண்டும். ஆனாலும், இந்த தண்ணீரை ஆந்திரா முறையாக வழங்குவது இல்லை. கடந்த, 2014, ஜூலை வரை, தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழக அரசு தரப்பில் கடிதம் எழுதியதைத் ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

மின் உற்பத்தி திறன் 13,366 மெகாவாட் ஆக அதிகரிப்பு: கோடையில் மின் பற்றாக்குறை குறையும் என எதிர்பார்ப்பு

Posted:

மேட்டூர்: தமிழக மின்வாரியத்தின் மின் உற்பத்தி நிறுவுதிறன், 13,366 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளதால், நடப்பாண்டு கோடையில் மின்பற்றாக்குறை குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மின்தேவையை பூர்த்தி செய்யவும், புதிய திட்டங்களை உருவாக்கி, மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், தமிழகத்தில்,1957ல் மின்வாரியம் அமைக்கப்பட்டது. அப்போது, 256 மெகாவாட் ஆக இருந்த தமிழகத்தின் அனல், புனல், அணு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யும், மரபுசார் மின் உற்பத்தி நிறுவு திறன், கடந்த 2008ல், 10, 122 மெகாவாட் ஆக உயர்ந்தது.எனினும், கடந்த, 2008ல் மின்தேவையை விட, வினியோகம் குறைந்ததால், ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

9 மாநில கவர்னர்கள் நியமனம் எப்போது?

Posted:

புதுடில்லி:'ஒன்பது மாநிலங்களில் காலியாக உள்ள கவர்னர் பணியிடங்கள், பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் நிரப்பப்படும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த மே மாதம், மத்தியில் பொறுப்பேற்றதும், உ.பி., மகாராஷ்டிரா, கேரளா உட்பட, 11 மாநிலங்களுக்கு, புதிய கவர்னர்களை நியமித்தது. பா.ஜ.,வை சேர்ந்தவர்கள்அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள் அல்லது பா.ஜ.,வுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள். குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடிக்கு குடைச்சல் கொடுத்து வந்த, ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]

நிறைவேறுமா ஜி.எஸ்.டி., மசோதா

Posted:

புதுடில்லி: பார்லிமென்ட்டில் இன்று, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவைகள் வரி மசோதா, விவசாயி தற்கொலை விவகாரம் போன்றவை, முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்பதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.இந்த வாரம், வெள்ளிக்கிழமை, மே தினத்தை முன்னிட்டு விடுமுறை என்பதால், நான்கு நாட்கள் மட்டுமே பார்லி., இயங்கும்.அதனால், மத்திய அரசு, முடிந்தவரை, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை, லோக்சபாவில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.கடந்த வாரம், லோக்சபாவில், ஜி.எஸ்.டி., மசோதாவை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, 'இது, நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார ...

[[ This is a content summary only. Visit my website for full links, other content, and more! ]]